மேலும் செய்திகள்
விலை உயர்ந்த கோவைக்காய், சவ்சவ்
13-Dec-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.50 க்கு விற்ற அவரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.60 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம், மலைப்பகுதி கிராமங்களில் அவரைக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது.சில நாட்களாக வரத்து அதிகமாக இருந்ததால் அவரைக்காய் விலை குறைந்து கிலோ ரூ.50 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் அவ்வப்போது பெய்த மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது.இதன் காரணமாக அவரைக்காய் விலை கிலோவிற்கு ரூ.10 அதிகரித்து ரூ.60 க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
13-Dec-2024