உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆக்கிரமிப்பில் கண்டிப்பு காட்டிய ஆர்.டி.ஒ.,

ஆக்கிரமிப்பில் கண்டிப்பு காட்டிய ஆர்.டி.ஒ.,

கொடைக்கானல்: கொடைக்கானலில் அனைத்து துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆர்.டி.ஓ., சிவராம் பேசினார். செப்.25 முதல் நெடுஞ்சாலைத்துறை ரோட்டோமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது. இதில் நகராட்சி, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை இணைந்து அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆர்.டி.ஓ., சிவராம் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. பேசிய அவர்,நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். நெடுஞ்சாலைத் துறை தவிர்த்து பிற துறையினர் நடவடிக்கை இல்லாத நிலை உள்ளது. சம்மந்தப்பட்ட துறையினர் நாள்தோறும் ஆக்கிரமிப்பு அகற்றுதலில் உள்ள நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். கடைபிடிக்காத துறையினர் மீது கடுமை காட்டி மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !