உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாக்கடையில் தேங்கும் கழிவு; சேதமான மேன்ஹோல்கள் - சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்

சாக்கடையில் தேங்கும் கழிவு; சேதமான மேன்ஹோல்கள் - சிரமத்தில் திண்டுக்கல் 7 வது வார்டு மக்கள்

திண்டுக்கல்: துார்வாராமல், பராமரிக்காமல் மண் நிரம்பி கழிவு நீர் தேங்கிய சாக்கடை , தெருநாய்கள் தொல்லை, சேதமடைந்த மேன்ேஹால்கள் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 7 வது வார்டு மக்கள்கிழக்கு கோவித்தாபுரம் சமயபுரம் மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் தெரு, அஞ்சுகம் தெரு, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய இந்த வார்டில் தீர்க்கப்படாத பிரச்னைகள் பல உள்ளன. குறிப்பாக சாக்கடைகள் துார்வாரப்படுவதில்லை. கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை பெய்தால் ரோடுகளில் கழிவுநீர் வெள்ளம் போல் ஓடும் நிலை உள்ளது. இதனால் நோய்தொற்று அபாய நிலை உள்ளது.கொசுத்தொல்லைக்கு பஞ்சம் இல்லை. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை . மேன்ஹோல்கள் - சேதமடைந்து காணப்படுகின்றன. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு தெரு நாய்கள் மக்களை அச்சுறுத்துகிறது. இரவில் டூவீலர்களில் செல்பவர்களை கடிக்கும் நிலையும் தொடர்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் இங்கேயும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதோடு கருத்தடை செய்து தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் வேண்டும். பாதுகாப்பு இல்லாத பகுதியாக உள்ள இங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லை.

சாக்கடைகளை சீரமையுங்க

சதீஸ்குமார், சமயபுரம் மாரியம்மன் கோயில் தெரு : சாக்கடையில் மண் நிரம்பி கழிவு நீர் தேங்கி உள்ளது. குழந்தைகள், முதியவர்கள், கோயிலுக்கு வருவோர் என பலரின் பயன்படுத்தும் பகுதியாக இது இருக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் தொய்வுகள் உள்ளன. தெரு விளக்குகள் அதிகப்படுத்திட வேண்டும். அடிப்படை வசதிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து சரிசெய்ய வேண்டும்.

தண்ணீர் பிரச்னை உள்ளது

மணிகண்டன், காமராஜர் தெரு : முன்பு பெரிய தண்ணீர் தொட்டிகள் இருந்தன. தற்போது சிறிய டேங்குகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முறையாக தண்ணீர் வருவதில்லை. பழமையான சமயபுரம் மாரியம்மன் கோயிலை சீரமைக்க வேண்டும். அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இது போன்ற சிறிய கோயில்களை கவனிக்க வேண்டும்.

விரைவில் சரி செய்யப்படும்

ரவிச்சந்திரன், கமிஷ்னர் : கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாக்கடைகள் துார்வாரப்பட்டு இதர குறைகளும் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை