நாடகத்தால் இறந்த தொழிலாளி
வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே விஷம் குடித்ததாக சில நாட்களுக்கு முன்னர் நாடகமாடியவர் நிஜத்தில் விஷம் சாப்பிட்ட நிலையில், இதுவும் நாடகம் என உறவினர்கள் கண்டு கொள்ளாததால் கூலித் தொழிலாளி இறந்தார்.புத்துார் அரண்மனைப்பட்டியை சேர்ந்தவர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி சின்னச்சாமி 40. மனைவி, குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் அரளி விதைகளை பாக்கெட்டில் வைத்த நிலையில் அதை சாப்பிட்டுவிட்டதாக வீட்டில் தெரிவித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் விஷப் பொருள் ஏதும் சாப்பிடவில்லை என பரிசோதனையில் தெரிந்தது.இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் விஷ கிழங்குகளை சாப்பிட்டுள்ளார். இதை தெரிவித்தும் உறவினர்கள் நம்பாமல் அலட்சியமாக இருந்த நிலையில் தாமதமாக பாதிப்பு கண்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சின்னச்சாமி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.