உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கே.அய்யாபட்டியில் தீர்த்த குட ஊர்வலம்

கே.அய்யாபட்டியில் தீர்த்த குட ஊர்வலம்

கோபால்பட்டி; கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி மாணிக்க விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. இக்கோயில் விழா ஆக.13ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து கோயில் முன் யாகசாலை அமைக்க முளைப்பாரி வளர்க்கப்பட்டு கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்து பக்தர்கள் திருச்செந்துார், ராமேஸ்வரம், திருமலைகேணி, அழகர் கோவில் மலை, கரந்தமலை, தலைக்காவிரி, சுருளி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தங்களை அய்யனார் கோயிலில் வைத்து பூஜை செய்தனர். நேற்று மாலை மேளதாளம் முழங்க அய்யனார் கோயிலில் இருந்து தீர்த்த குடம் ஊர்வலமாக காளியம்மன், பகவதி அம்மன் கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ