உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்

தட்டி கேட்க இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்: மஹா., கவர்னர் ராதாகிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல் : ''எங்கள் சகோதரர்களை அவர்களின் மனைவி கண்முன் சுட்டுக்கொன்றவர்களை தட்டிகேட்க கூட இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்,'' என, திண்டுக்கல்லில் மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அபிராமி அம்மன் பக்தர்கள் குழு சார்பில் நடந்த ஆன்மிக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திண்டுக்கல் மண்ணில் பலர் உயிர் தியாகங்கள் செய்தும் அன்னை அபிராமி இன்று வரை தன் இருப்பிடமான மலை மீது செல்லாமல் அடிவாரத்தில் இருக்கிறார். தமிழகத்தில் ஹிந்து மதம் மீண்டும் எழுச்சி பெறும் நாள் விரைவில் வரப்போகிறது. இறைவன் இருந்த இடத்தை போராடி பெற வேண்டிய நிலை நம் நாட்டில் மட்டுமே உள்ளது. வேலுார், செஞ்சியில் வெற்றி பெற்ற நாம் திண்டுக்கல் மலைக்கோட்டையிலும் வெற்றி பெறுவோம். இஸ்லாமியர்களுக்கு எதிராக ஹிந்துக்கள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால் முருக கடவுளை மறந்து விட வேண்டும் என சொல்லும் போது தான் அவர் இல்லாமல் வாழ முடியாது என கூறுகிறோம். மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் 50 லட்சம் பேர் பங்கேற்க வேண்டும்.பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் திட்டமிட்ட சதி என கூறுவதற்கு கூட தமிழகத்தில் ஒரு சில யூடியூபர்களுக்கு மனம் இல்லை. எங்கள் சகோதரர்களை அவர்களின் மனைவி கண்முன் சுட்டுக்கொன்றவர்களை தட்டிகேட்க கூட இயலாத தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.தேசிய கல்விக்கொள்கையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை எல்லா பாடங்களையும் தாய் மொழியான தமிழ் மொழியில் கற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.பின் அவர் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகச்சரியான பாடத்தை விரைவில் கற்றுக்கொள்ளும். வி.சி.க., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டப்படும்.துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் கவர்னர்களுக்கு முழு அதிகாரமும், கேரளா கவர்னருக்கு பரிபூரண அதிகாரம் உள்ளது என இரு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க சட்ட வல்லுனர்களை வைத்து செயல்படுவது நன்மையாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

முருகன்
ஏப் 28, 2025 16:08

கையில் அதிகாரத்தை வைத்து கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் இல்லை உங்களிடம்


Padmasridharan
ஏப் 28, 2025 12:18

எதை தட்டி கேட்கணும் அய்யா.. தமிழ்நாட்டில் அரசு அதிகார பிச்சையெல்லாம் அதட்டிதான் கேட்கின்றனர். இதனால் எவனெவன் பணம் வெச்சிருப்பான், அந்த பணத்தை எப்படி அதிகாரத்தை வெச்சி அதட்டி ஏமாற்றை வாங்கலாம்னுதான் சுத்திகிட்டு இருக்காங்க uniform போட்டவங்களும்_போடாதவங்களும் .லஞ்சப்பணத்துக்காக


Oviya Vijay
ஏப் 28, 2025 08:51

சுட்டுக் கொல்லும் வரை வேடிக்கை பார்த்த தலைவர்கள் மத்தியில் ஆட்சி செய்து கொண்டுள்ளனர் என்பதை உங்களுக்கு நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. அதையும் நீங்களாகவே கேட்டிருந்தால் சபாஷ் என உங்களைக் கூறியிருப்போம்...


பல்லவி
ஏப் 28, 2025 08:40

உள்ளூர் மக்களின் மனதை கவரும் விதமாக பேச்சு வரல போல


அப்பாவி
ஏப் 28, 2025 05:54

இவுரு கெவுனரா இல்லை தெருமுனை பேச்சாளரா?


anbu
ஏப் 28, 2025 05:22

நீங்கள் மராட்டியத்தில் தட்டி கேளும் ஒய் நம்ம ரவி போல இருக்கணும் மும்பாயில் முடியுமா


M R Radha
ஏப் 28, 2025 07:05

துண்டு சீட்டு பார்த்தும் சரியாக படிக்காதவரை பார்த்தும் கேக்கணும்


Palanisamy T
ஏப் 28, 2025 04:47

1. ஹிந்துமதம் தமிழகத்தில் எழுச்சிப் பெறவேண்டும் என்றுச் சொல்வதைவிட சைவம் இங்கு மீண்டும் தலைத்தோங்க வேண்டுமென்றுச் சொல்லுங்கள். ஹிந்துமதம் பிற மதங்களைப் போன்று ஒருமதத்தின் அடையாளம். பிறப்பால் நாம் அனைவரும் இந்துக்கள். சைவமென்பது தமிழர்களின் உயிர்மூச்சான மொழியின் அடையாளம் இறைவன் மட்டும் உண்மை, அவன் எல்லா உயிர்களிலும் குடிக் கொண்டுள்ளான் என்று சொல்லும்மொழி. காலம் நமக்கு தந்த தனித்துவ அங்கீகாரம். சைவத்தின் பெருமைகளை சொல்ல இந்த ஏடும் கொள்ளாது காலமும் கொள்ளாது. தமிழை சரியாக விளங்கி கொள்ளாமல் அரைக் குறையாக படித்து சிந்திக்காமல் பேசும் திராவிட இயக்கங்களுக்கு இந்த உண்மை களெல்லாம் விளங்காது . அறிவாளிகள் பகுத்தறிவுக் கொள்கைகளை பற்றி பேசலாம். மற்றவர்கள் அதுவும் குறிப்பாக திராவிட தலைவர்கள் பேசுவது நன்மைகள் பயக்காது . 2. ஹிந்துமதம் இந்திய நாட்டில் தலைத்தோங்க வேண்டும், வளரவேண்டுமென்றால் நம் ஹிந்துமக்களிடையே நன்கு வேரூன்றியுள்ள உயர்வு தாழ்வு என்ற சாதி அடையாளங்களை தீண்டாமைகளை குறைக்க முடியுமா என்பதை பார்ப்பீர் களென்று நம்புகின்றேன். அதன் தாக்கம் குறைந்தால் ஹிந்துக்கள் வளர்ச்சிப் பெறுவார்கள், மேன்மையடைவார்கள் . அதை மட்டும் ஹிந்து இயக்கங்கள் செய்தால் போதும்.


Kasimani Baskaran
ஏப் 28, 2025 03:54

திராவிடமயமாக்கப்பட்ட தமிழக பாஜக தலைமை இப்படித்தான் வீட்டுக்குள் மட்டும் கொக்கரிக்கும். தீவிரவாதத்துக்கு தீம்க்கா போதை பொருள் விற்பனை மற்றும் வக்ப் சொத்தில் வரும் வருமானம் மூலம் பணம் திரட்ட விடுகிறது என்று கூட புகார் சொல்ல முடியாது. போதை அயலக அணி மீது நேரடியாக கட்டம் கட்டக்கூட முடியாது. என்ன மனிதர்களோ இவர்கள்.


கொங்கு தமிழன் பிரஷாந்த்
ஏப் 28, 2025 03:43

யாரு நம்ம அண்ணாமலையை சொல்றீங்களா?


M R Radha
ஏப் 28, 2025 07:06

தூங்கி எழுந்தாச்சா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை