உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இல்லவே இல்லை தெரு விளக்குகள்...ஹாயாக சுற்றும் தெரு நாய்கள் அல்லல்படும் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர்

இல்லவே இல்லை தெரு விளக்குகள்...ஹாயாக சுற்றும் தெரு நாய்கள் அல்லல்படும் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர்

திண்டுக்கல், : 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் இல்லை,கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமல் ரோடுகளில் தேங்கும் கழிவுநீர்,மழை நேரங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்,எங்கு பார்த்தாலும் தெரு நாய்கள் , குதறும் கொசுக்கள்,தெரு விளக்குகள் சமூக விரோத செயல்கள் என ஏராளமான பிரச்னைகளில் பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகரை சுற்றிய மக்கள் பாதிக்கின்றனர்.திண்டுக்கல் மாலப்பட்டி ரோடு பகவான் ஸ்ரீ சேஷாத்திரி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜாகிர்,செயலாளர் பிரபாத்,பொருளாளர் சஞ்சய்,நிர்வாகிகள் விமலா,ஸ்டெல்லா மேரி கூறியதாவது: மாலப்பட்டி ரோடு சாத்தப்பன் நகர்,மஹா லட்சுமி நகர்,ஐஸ்வர்யா நகர்,திருமணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடுகள் அமைக்கவில்லை. மழை நேரங்களில் சகதியில் தடுமாறுகின்றனர். தெருக்களில் ஒரு இடத்தில் கூட தெரு விளக்குகள் இல்லை. இரவில் மக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். சிலர் மது குடிப்பது,திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷன்களிலும் பல்வேறு புகார்களை கொடுத்து விட்டோம். எப்போதாவது ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் மக்களை கண்டாலே துரத்துகின்றன. சில நேரங்களில் வெறி பிடித்து கடிக்கின்றன.மழை நேரங்களில் மழைநீர்,கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமல் ரோடுகளில் மழைநீர் தேங்குகிறது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை ஊராட்சி நிர்வாகத்தின் செட்டிக்குளத்தில் கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதி சுகாதாரக்கேடுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மழை நேரங்களில் குப்பை கழிவுநீரில் மிதந்து வீடுகளுக்குள் வந்து விடுகிறது. பாம்புகள் அதிகளவில் வீட்டிற்குள் வருகிறது. கொசுக்கள் வேறு மக்களை பாடாய்படுத்துகிறது. கொசு மருந்துகள் அடிப்பதே இல்லை. குற்ற செயல்களை தடுக்க போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை