உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கள்ளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கள்ளர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: டி.என்.டி., ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், கள்ளர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைக்கும் அரசாணை 40 ஐ ரத்து செய்ய வேண்டும். கள்ளர் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் நியமனங்களை டி.ஆர்.பி., மூலமாக இடைநிலை ஆசிரியர்களாக பிரமலைக்கள்ளர்களையே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். மாநில தலைவர் பாண்டி, மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.கே., தேவர், சபரிபாண்டி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ