வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கே கொச்சினில் கடந்த 3 நாட்களாக, 24 நவம்பர் முதல், முருங்கைக்காய் கிலோ ரூ. 320. நிறைய பேர் வாங்குவதில்லை. அடுத்த வாரம் குறையும் போல.
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் முருங்கை விளைச்சல் அதிகமாக இருந்த போது போதுமான விலை கிடைக்காமலும், விலை அதிகரித்து நிலையில் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதாலும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்க விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும். மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.இங்கு காய்கறி வகைகள் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதையொட்டியே ஒட்டன்சத்திரத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவிக்கும் விளை பொருட்களுக்கு சீரான விலை எப்போதும் கிடைப்பதில்லை. விளைச்சல் மிகுந்த நாட்களில் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவது உண்டு. காய்களை பறித்தெடுக்கும் கூலி அதிகமாக உள்ளதால் விலை குறைவான நாட்களில் காய்கறிகளை பறிக்காமல் தோட்டத்திலே விட்டு விடும் நிலையும் தொடர்கிறது. விலை போகாத காய்கறிகளை வீதியில் கொட்டி செல்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. விலை ஏற்றத்தாழ்வுகளால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு விவசாய விளைபொருட்களுக்கு அனைத்து நாட்களிலும் சீரான விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக முருங்கை அதிகமாக விளையும் நாட்களில் கிலோ ரூ.10 க்கு கீழ் வந்துவிடுகிறது. இந்த விலையானது பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது .சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.15 க்கு கீழ் விற்பனையானது. தற்போது சீசன் முடியும் தருவாயில் ஒரு கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை ஆகிறது. ஆனால் இந்த விலை உயர்வை விவசாயிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் விளைச்சல் மிகவும் குறைந்துவிட்டது.இதனை போக்க விளைச்சல் அதிகமாக உள்ள நாட்களில் குறைந்த விலைக்கு விற்காமல் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்க விவசாயிகள் முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும். .........அரசே கொள்முதல் செய்யணும்சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ முருங்கை ரூ.15 க்கு கீழ் விற்றது. தற்போது ரூ.100 க்கு மேல் விற்கிறது. விதைப்பு, பராமரிப்பு, பறிப்பு என ஒவ்வொரு நிலையிலும் விவசாயிகள் பயிர்களை வளர்க்க அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் விளைச்சல் அதிகமாக உள்ள நாட்களில் அதற்கு ஏற்றார் போல் விலை கிடைப்பதே இல்லை. இதனால் விவசாயிகள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கின்றனர். தக்காளி ,வெங்காயம் விலை அதிகரிக்கும் போது அரசு கொள்முதல் செய்து மக்களுக்கு விநியோகம் செய்கிறது. அதேபோல் காய்கறிகள் விலை குறைவாக விற்கும்போது அரசு கொள்முதல் செய்து விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வழிவகை கிடைக்கும். - கந்தசாமி, விவசாயி, அப்பியம்பட்டி
இங்கே கொச்சினில் கடந்த 3 நாட்களாக, 24 நவம்பர் முதல், முருங்கைக்காய் கிலோ ரூ. 320. நிறைய பேர் வாங்குவதில்லை. அடுத்த வாரம் குறையும் போல.