உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்

பழநியில் நாளை திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவக்கம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச., 7) காப்பு கட்டுதலுடன் துவங்கி டிச., 13 வரை நடக்கிறது.நாளை மாலை 5:30 மணிக்கு சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை தொடர்ந்து டிச.,12 மாலை 5:30 மணிக்கு பூஜை சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றப்பட்டு சண்முகார்ச்சனை நடக்கிறது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடக்கிறது.டிச. 13 அன்று பெரிய கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜை, மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல்,யாகசாலை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்ற மாலை 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பானை ஏற்றப்படுகிறது. இதையொட்டி அன்று தங்கரத புறப்பாடு நடைபெறாது. இதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பானை ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ