மேலும் செய்திகள்
பக்தர்கள் நலன் வேண்டி திசா யாகம்
23-Dec-2024
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம்
06-Dec-2024
பழநி : பழநி வீரதுர்க்கை அம்மன், அழகு நாச்சி அம்மன் கோயிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு திசா யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு, நலன் வேண்டி கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து திசாஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில் குமார் கலந்து கொண்டனர். கிழக்கு கிரிவீதி அழகு நாச்சி அம்மன் கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து, திசாஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் உரிமையாளர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
23-Dec-2024
06-Dec-2024