மேலும் செய்திகள்
வீட்டு கதவை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
04-Nov-2024
நிலக்கோட்டை : நிலக்கோட்டை இ.பி., காலனி நாகல் நகர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.நிலக்கோட்டை இ.பி., காலனி நாகல் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் 55. நவ.17 இரவில் இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். கதவை உடைக்கும் சத்தம் கேட்டதால் சண்முகம் ,வீட்டில் உள்ளவர்கள் வீட்டின் மின் விளக்குகளை எரிய விட்டு சத்தம் போட்டதால் திருட வந்தவர்கள் தப்பினர்.நிலக்கோட்டை போலீசார் சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தை சேர்ந்த கார்த்திக் பாண்டி 27, திருப்பதி 19, தென்கரை பகுதியை சேர்ந்த அஜய்கண்ணன் 22, ஆகியோரை கைது செய்தனர்.
04-Nov-2024