நடைமேடையில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
சேதமான மேல்நிலை தொட்டிதிண்டுக்கல் அருகே பாறைப்பட்டியில் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்துள்ளது .பயன்பாடு இன்றி கட்டட கம்பிகள் வெளியே தெரிவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் தொட்டியை சீரமைக்க வேண்டும் இல்லையெனில் அகற்ற வேண்டும். சிவா, பாறைப்பட்டி...............----------ஆபத்தான டிரான்ஸ்பார்மர்நத்தம்- திண்டுக்கல் ரோடு மெய்யம்பட்டி ரோட்டோரம் ஆபத்தான நிலையில் மின் டிரான்ஸ்பார்மர் உள்ளது . இதன் வழியே செல்லும் வாகனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் மாற்றி அமைக்க வேண்டும். ராமசாமி, நத்தம்........சிதைந்த தடுப்புகள்எரியோடு ரயில்வே மேம்பாலத்தில் அரசு பள்ளி அருகில் ரோட்டோரம் உள்ள பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் சிதைந்து கிடக்கிறது. இப்பகுதியில் சீரமைப்பு பணி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---தினேஷ், எரியோடு...........----------நடைமேடையில் குப்பைபழநி சிவகிரிபட்டி பைபாஸ் ரோட்டில் இருந்து இடும்பன் குளத்திற்கு செல்லும் ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்லும் நடைமேடையில் குப்பை,நுங்கு கழிவு கொட்டி குவித்துள்ளனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது . மலர்விழி, பழநி.............------------சுத்தமில்லா சாக்கடைபழநி புது தாராபுரம் ரோடு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் பல நாட்களாக சாக்கடை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .பள்ளி வரும் மாணவர்கள் பாதிக்கின்றனர். துார் வார வேண்டும். பகவதி, பழநி.........------------நாய்கள் தொல்லைதிண்டுக்கல் அருகே மல்லிகை நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது .ஏராளமான நாய்கள் சுற்றி திரிகின்றன .வாகனத்தில் செல்பவர்களும் பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது.கண்ணதாசன், திண்டுக்கல்.................------------கழிவுகளால் தொற்றுவத்தலக்குண்டு -உசிலம்பட்டி ரோட்டில் கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது .சுகாதாரகேடும் ஏற்படுகிறது. பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளதால் கோழிக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்.முருகேசன், வத்தலகுண்டு..................-------------