உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டோஸ்ட்மாஸ்டர் சங்க துவக்க விழா

டோஸ்ட்மாஸ்டர் சங்க துவக்க விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் விவேரா கிராண்டே ஓட்டலில் திண்டுக்கல் டோஸ்ட்மாஸ்டர் சங்க துவக்க விழா நடந்தது. டோஸ்ட்மாஸ்டர் சங்க மாநில பொறுப்பாளர்கள் தலைவர் மோகன கிருஷ்ணன்,பார்த்தசாரதி,அஸ்வதி ராஜன் துவக்கி வைத்தனர். அரிமா சங்க கவர்னர் சசிகுமார்,பி.என்.ஐ. நிறுவன திண்டுக்கல் மண்டல செயல் இயக்குனர் ஜெகன் பழனிசாமி,ரோட்டரி கவர்னர் சுப்பிரமணி பேசினர். சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தலைவர் ஜெயசீலன் பதவி ஏற்றார். அனைத்து உறுப்பினர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பட்டய சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வட்டார இயக்குனர் பிரியங், பகுதி இயக்குனர் நவீன் குமார் வழி நடத்துனர் விவேகானந்தன், டாக்டர் ரேவதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை திண்டுக்கல் டோஸ்ட் மாஸ்டர் சங்க தலைவர் ஜெயசீலன்,மகேஷ், பாண்டி மணிகண்டன், பாண்டியன், ஆனந்த் குமார், பார்கவி, சரயு,விவேக், அம்சா, யுவசாரதா செய்தனர். செயலாளர் சரயு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி