உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகையிலை, பிளாஸ்டிக் :10 கடைக்கு சீல்

புகையிலை, பிளாஸ்டிக் :10 கடைக்கு சீல்

திண்டுக்கல : திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் தடைபுகையிலை,பிளாஸ்டிக் பதுக்கிய 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி,ஜாபர்சாதிக், கண்ணன், வசந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் நகர்,சாணார்பட்டி,கோபால்பட்டி,நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் டீக்கடைகள்,மளிகை கடை உள்ளிட்ட கடைகளில் சோதனை செய்தனர். அப்போது 10 கடைகளில் 90 கிலோ புகையிலை ,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து 109 கடைகளுக்கு சீல் வைத்து ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்தனர். 90 கிலோ புகையிலை,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 2 பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து இதுபோன்று புகையிலை,பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ