ரயிலில் தடை புகையிலைப் பொருட்கள்
திண்டுக்கல் : வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக ரயில்களில் புகையிலைப்பொருட்கள் கடத்தப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு புகார் வந்தது.இதையடுத்து திண்டுக்கல் வழியாக செல்லும் ரயில்களில் நேற்று தீவிர சோதனை நடத்தினர். நிஜாமுதீனில் இருந்து மதுரை செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பதிவில்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று ஒரு மூட்டை கிடந்தது. அதில் தடை செய்யப்பட்ட 9 கிலோ புகையிலைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.