புகையிலை கடைக்கு சீல்
நத்தம்: நத்தம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சாபர்சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் வத்திபட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். டீ கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தலா 25 ஆயிரம் அபாரதம் விதித்தனர். கடைக்கு சீல் வைத்தனர்.