கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சரஸ்வதி, ஆயுதபூஜை தொடர் விடுமுறையையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் நகர் பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது. இங்குள்ள பிரையன்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், வனச்சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் பயணிகள் மகிழ்ந்தனர்.