உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

கொடை யில் குவிந்த சுற்றுலா பயணிகள் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஓணம் பண்டிகை, வார விடுமுறையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை நகரில் குவிந்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று முன் தினம் முதல் ஏராளமான வாகனங்கள் மலை நகரில் முகாமிட்டன.தொடர் விடுமுறை , தரைப்பகுதியில் வெளுத்து வாங்கும் வெயிலை சமாளிக்க குளுகுளு நகரான கொடைக்கானலில் பயணிகள் முகாமிட்டனர். நேற்று காலை வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் நகர் பகுதியை வந்தடைய இரண்டு மணி நேரம் என்ற நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல்மலை கிராமங்களான மன்னவனுார், பூண்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நீடித்தது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நியமித்த போதும் நெரிசல் கட்டுப்படுத்த இயலாமல் வாகனங்கள் ஊர்ந்தன. நகர்ப்பகுதியில் நீடித்த நெரிசலால் பயணிகள் அவதி அடைந்தனர். மதியத்திற்கு பின் மூன்று மணி நேரம் விட்டு மிதமான மழை பெய்த நிலையில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பயணிகளின் வருகையால் திக்குமுக்காடியது.காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி