உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் : வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலில் தொடர் மழை பெய்கிறது. இதையடுத்து குளு குளு நகரான கொடைக்கானல் சில்லிட்டது. வெயிலின் தாக்கம் அறவே இல்லாத நிலையில் இங்குள்ள பசுமை போர்த்திய மலைமுகடுகள், புல்வெளிகள் பச்சை பசேலென அழகுற காட்சியளித்தது. பிரையன்ட் பூங்கா,ரோஜா பூங்கா, கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுர் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை பயணிகள் ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை,சைக்கிள் சவாரியும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை