வர்த்தக சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்; மத்திய,மாநில அரசுகளின் புதிய சட்டத்தின்படி வாடகைக்கு இருக்கும் கடை, நிறுவன வணிகர்களுக்கு வாடகை தொகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,வரி விதிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த புதிய சட்டம் சிறு, குறு வணிகம் செய்யும் வணிகர்களுக்கு பொருளாதார பிரச்னைகளை உருவாக்குகிறது என்பதால் ஜி.எஸ்.டி.,வரியை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட வர்த்தகர் சங்கம்,மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம் சார்பில் திண்டுக்கல் வணிகவரி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வர்த்தகர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன்,மாவட்ட தொழில் வர்த்தகர் சங்க தலைவர் கிருபாகரன் தலைமை வகித்தனர். ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்,மளிகை கடை சங்கம்,நகைக்கடை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததை தொடர்ந்து வணிக வரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.