உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாரம்பரிய உணவு திருவிழா

பாரம்பரிய உணவு திருவிழா

சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம்,சிறுதானிய பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. சாணார்பட்டி, அஞ்சுகுழிபட்டி, கோம்பைப்பட்டி,கணவாய்பட்டி. வேம்பார்பட்டி உள்ளிட்ட 21 ஊராட்சிகளின் மகளிர்சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் சிறு தானியங்களை கொண்டு பாரம்பரிய வகைகளை உணவு சமைத்து காட்சிக்காக வைத்திருந்தனர். சிறப்பாக உணவுதயாரித்த சுயஉதவி குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சி செயலாளர் முருகேசன், ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, சுமதி,ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத்தலைவர் ராமதாஸ் பங்கேற்றனர். வட்டார இயக்க மேலாளர் பிரமிளா நன்றி கூறினார். சிறுதானிய உணவு பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி சாணார்பட்டி மெயின்ரோடு வழியாக மீண்டும் ஒன்றிய அலுவலகத்தில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை