உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி

புழுதி பறக்கும் ரோடால் போக்குவரத்து அவதி

ஆயக்குடி: பழநி ஆயக்குடி திண்டுக்கல் ரோடு சேதமாகி வாகனங்கள் செல்லும் போது ரோட்டில் உள்ள புழுதி பறந்து வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.பழநி புது ஆயக்குடி பகுதியில் திண்டுக்கல் முக்கிய ரோடு உள்ளது. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் ரோடு சேதமடைந்தது. சில நாட்களுக்கு முன் ரோடு அமைக்க ஜல்லி, மண் கொட்டப்பட்டு தயார் செய்யப்பட்டது. ஆனால் அதற்கு பின் பெய்த மழையின் காரணமாக அப்பகுதி மீண்டும் சேதமடைந்தது. சில நாட்களாக வாகனங்கள் இப்பகுதியில் செல்லும்போது ரோட்டில் உள்ள மண் வாகனங்களின் வேகத்திற்கு காற்றில் பறந்து புழுதியை உருவாக்கியது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். வாகன ஓட்டிகள்,ரோட்டில் தடுமாறி விழுகின்றனர். மண் புழுதி வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. நேற்று இப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதித்து ரோட்டின் ஒரு பகுதி மட்டும் வாகனம் செல்லுமாறு அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து இடையூறு அதிகரித்தது. நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ