உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம்- - தாராபுரம் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம்- - தாராபுரம் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம் : ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.ஒட்டன்சத்திரம் நகர் பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. நெரிசலை குறைக்கும் வகையில் புதிதாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக ஒட்டன்சத்திரம் நகருக்குள் செல்லாமல் பழநி, தாராபுரம் வழித்தடங்களில் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், கார்கள் செல்கின்றன. இருந்த போதிலும் நெரிசல் குறையவில்லை.ஒட்டன்சத்திரம் நகருக்குள் தாராபுரம் ரோடு அகலப்படுத்தப்பட்ட பின்பும் ஆக்கிரமிப்பு காரணமாக நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் நடுரோட்டிலே நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பஸ் நகரும் வரை பஸ்சின் பின்புறம் வாகனங்கள் நிற்க வேண்டி உள்ளது.தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் மார்க்கெட் ரோடும் தும்மிச்சம்பட்டி செல்லும் ரோடும் தாராபுரம் ரோட்டுடன் இணைகின்றது. இந்த பகுதியில் டூவீலர் போக்குவரத்து அதிகம் உள்ளதால் இந்த பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக காலை மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக உள்ளது. பஸ் நிறுத்தங்களில் பஸ்களை ஓரமாக நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லவாது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் தும்மிச்சம்பட்டி பிரிவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிக்னல் அமைக்கலாம். மேலும் போக்குவரத்து விதிகளுக்கு மாறாக ஒரு வழி பாதையில் டூவீலர்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி நெரிசலை ஒழுங்கு படுத்த வேண்டும். இதோடு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை