உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தொடரும் நெரிசல்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் வாகனங்களை நீண்ட நேரம் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்வதால் அடிக்கடி நெரிசலில் சிக்கி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் இருந்து கலைஞர் நுாற்றாண்டு காய்கறி மார்க்கெட்டுக்கு ஒரு ரோடு செல்கிறது. ரோட்டின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. இவற்றின் முன்பு நீண்ட நேரம் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. இந்த ரோட்டில் உள்ள ஒர்க் ஷாப்களுக்கு வரும் வாகனங்கள் ரோட்டை மறைத்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாலை, இரவு நேரங்களில் இங்குள்ள மீன் கடைகள், சூப் கடைகளுக்கு செல்பவர்கள் டூவீலர்களை ரோட்டிலே நிறுத்தி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகரின் வடக்கு பகுதியில் இருந்து திண்டுக்கல் ரோடு, பஸ்ஸ்டாண்ட் குறைவான நேரத்தில் செல்ல இந்த மார்க்கெட் பைபாஸ் ரோடு பெரிதும் பயன்படுகிறது. இதன் காரணமாக இந்த ரோட்டில் டூவீலர் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்த நேரத்தில் சென்று விடலாம் என நினைத்து இந்த ரோட்டில் பயணிக்கும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றன. வர்த்தக நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கடைகளை நீட்டிப்பு செய்து வருகின்றனர். இதனை அகற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் தனியாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இருந்தபோதிலும் போக்குவரத்து போலீசார் இந்த பைபாஸ் ரோட்டுப் பக்கம் எட்டிப் பார்ப்பது இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ