பழநியில் செயல்பாட்டுக்கு வந்த போக்குவரத்து சிக்னல்கள்
பழநி:பழநியில் போலீசார் சார்பில் போக்குவரத்து சிக்னல்கள் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. பழநியில் போக்குவரத்து சிக்னல்கள் காட்சி பொருளாகவே இருந்தன . காலை ,மாலை ,ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்களில் பழநி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. இதை தொடர்ந்து மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, ரெணகாளியம்மன் கோவில் நால் ரோடு ஆகியவற்றில் புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டது. இதை நேற்று இரவு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டன.ஆர்.எப்.ரோடு பகுதி சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என டி.எஸ்.பி., தனஜெயன் கேட்டுள்ளார்.