விவசாயிகளுக்கு பயிற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு,பசுமையாக்குதல் திட்டத்தின் மூலம் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி,கருத்தரங்கு திண்டுக்கல் மாவட்ட வன அலுவலகத்தில் நடந்தது. மண்டல வனப்பாதுகாவலர் காஞ்சனா தொடங்கி வைத்தார். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். வன விரிவாக்க அலுவலர் வேல்மணி நிர்மலா, வனச்சரக அலுவலர்கள் வெனிஷ், பாஸ்கரன் பேசினர்.