உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

நத்தம் : நத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நத்தத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் நடந்தது.லோக்சபா தேர்தல் ஏப்ரல்19ல் நடக்க உள்ள நிலையில் திண்டுக்கல் லோக்சபாதொகுதிக்குட்பட்ட நத்தம் சட்டசபை தொகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நத்தத்தில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. தாசில்தார் சுகந்தி தலைமை வகித்தார். ஓட்டளிக்க தகுதி படைத்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர் , மாற்றுத்திறனாளிகள் அவரவர் வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கும் வகையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று 12டி எனும் படிவத்தை கொடுத்து அதில் பூர்த்தி செய்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட அனைவரும் தேர்தல் குறித்த உறுதிமொழி எடுத்தனர். தனி தாசில்தார் விஜயலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் டேனியில் பிரேம்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ