மரம் நடுவிழா
கன்னிவாடி: அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அனுமந்தராயன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரம் நடுவிழா நடந்தது. டாக்டர் முத்துக்குமார் தலைமை வகித்தார். டாக்டர் சவிதா, திண்டுக்கல் சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ரூபபாலன் முன்னிலை வகித்தனர். அப்துல் கலாம் சமூகநல அமைப்பின் நிறுவனர் மருதை கலாம் வரவேற்றார். மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் செல்வக்குமார் துவக்கி வைத்தார். அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன், ரோட்டரி சங்க செயலாளர் ஜஸ்டின் ஜூடு, தன்னார்வலர் லோகவர்ஷினி பேசினர்.