உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்

பெயர் பலகையை மறைத்துள்ள முட்களால் சிரமம்

புதர் மண்டிய நிழற்குடை : வடமதுரை அக்கரைப்பட்டி ரோட்டில் தாதநாயக்கன்பட்டி பிரிவில் உள்ள நிழற்கூடை பயன்படுத்த முடியாத அளவிற்கு புதர் மண்டி கிடக்கிறது. புதர்களை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் ,உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----சங்கர், வடமதுரை.பலகை தெரியாது தடுமாற்றம் : முத்தனம்பட்டி அருகே பழைய கன்னிவாடி செல்லும் ரோட்டில் உள்ள பெயர் பலகை முட்களால் மறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெயர் பலகை தெரியாமல் தடுமாறுகின்றனர் .முள் மரங்களை வெட்டி பெயர்களை தெரியும்படி வைக்க வேண்டும்.-பழனிச்சாமி, முத்தனம்பட்டி.சிரமத்தில் வாகன ஓட்டிகள் : நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து மின்வாரிய அலுவலகம் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து அதிகமாக உள்ள பாதை என்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.-காளிதாஸ், நிலக்கோட்டை.குப்பை குவியலால் அவதி : திண்டுக்கல் ராஜகாபட்டி ரோட்டில் குப்பை அள்ளாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.மழை நேரம் என்பதால் மழை நீருடன் குப்பை கலந்து துர்நாற்றமும் வீசுகிறது .குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முத்துக்குமார், ராஜகாபட்டி.சாய்ந்த மின்கம்பம் : கொடைரோடு அருகே அம்மாபட்டி - சங்கராபுரம் ரோடு விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது .எந்தநேரமும் சாய்ந்து விழும் நிலை உள்ளதால் மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.-தங்கவேலு, கொடரோடு.குளம் போல் மழை நீர்கொடைரோடு பஸ் ஸ்டாப்பில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீரில் செல்ல வழி இல்லாமல் பல நாட்களாக தேங்கியுள்ள இதை அகற்ற வடிகால் அமைக்க வேண்டும்.-மருதபாண்டி, கொடைரோடு.சேதமடைந்த கட்டடம் : நிலக்கோட்டை நீர்வளத்துறை அலுவலக கட்டடம் சேதமடைந்து விபத்து அபாயத்தில் உள்ளது. மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கட்டடத்துக்குள் வருவதால் அலுவலர்கள் சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பொன்ராஜ் நிலக்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ