மேலும் செய்திகள்
டி.வி.ராமசுப்பையர் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
18-Oct-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் வி.ஜி. கல்வி அறக்கட்டளை, கலை சங்கமம் சார்பில் கல்வி, விளையாட்டில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கு டி.வி.ராமசுப்பையர் நினைவு விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது திண்டுக்கல் முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இதன் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாநகர தி.மு.க., செயலாளர் ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். வி.ஜி.,கல்வி அறக்கட்டளை செயலாளர் ஞானகுரு, புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயமேரி, மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு சங்க உதவி செயலாளர் சேசுராஜ் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி., கார்த்திக் விருது வழங்கினார். மாவட்ட கிரஷர் சங்க செயலாளர் மயில்வாகணன், உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் கலந்துகொண்டனர்.
18-Oct-2025