உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலப்பட மது விற்ற இருவர் கைது

கலப்பட மது விற்ற இருவர் கைது

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா தலைமையிலான போலீசார் கள்ளிப்பட்டி தாய் மூகாம்பிகை நகர் அருகே ரோந்து சென்றனர். அங்கு சாக்குப்பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது ஆழக்குவார்பட்டி தங்கப்பாண்டி 22, என்பது தெரிந்தது. அவரது பையில் 40 மது பாட்டில்கள் இருந்தன. அனைத்து பாட்டில்களிலும் மூடி திறந்திருந்த நிலையில், அவற்றை முகர்ந்து பார்த்தபோது நெடிய வாடை அடித்தது. மனித உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் விஷம் கலந்து இருக்கலாம் என்பதால் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பினர். மது பாட்டில் வைத்திருந்த தங்கப்பாண்டி, அவரது கூட்டாளி கள்ளிப்பட்டி சுந்தரம்மாள் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை