திருமண சவாரிக்கு மகளிர் டிக்கெட் மேலும் இருவர் சஸ்பெண்ட்
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் திருமண சவாரிக்கு அரசு பஸ்சில் மகளிர் இலவச டிக்கெட் வழங்கிய விவகாரத்தில் மேலும் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திண்டுக்கல் நத்தம் ரோடு போக்குவரத்து கிளை 2க்கு உட்பட்ட அரசு பஸ் செப்.15ல் கோபால்பட்டி டூ ஆத்துாருக்கு திருமண சவாரிக்காக புக் செய்யப்பட்டது. பயணிகளை ஆத்துார் டூ கோபால்பட்டிக்கு டிரைவர், கண்டக்டர் ஏற்றிச்சென்றனர். மதியம் அதே பஸ்சில் பயணிகளை ஏற்றி வந்து இறக்கினர்.அப்போது மகளிருக்கான இலவச டிக்கெட் வழங்கப்பட்டது. பஸ் செம்பட்டி அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர்கள் ஆய்வு செய்ததில் இதனை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் கிளை 2ல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் நேற்று முன்தினம் அலுவலர்கள் சுப்பையா,ஜோசப்நிக்சன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். நேற்று பஸ் டிரைவர் ஜாய்,கண்டக்டர் வினோத் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இவர்கள் தற்காலிக ஊழியர்கள் ஆவர்.