உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவி இறப்பு இருவரிடம் விசாரணை

மாணவி இறப்பு இருவரிடம் விசாரணை

வடமதுரை: அய்யலுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி திண்டுக்கல் அருகே தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். அக்.24ல் மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இறந்தார். மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய டாக்டர்கள் புகாரில் வடமதுரை போலீசார் விசாரித்தனர். கருக்கலைப்பு முயற்சி செய்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்தது தெரிந்தது. இவ்வழக்கு வடமதுரை மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு மாணவியின் பெற்றோர், உறவினரான இரு வாலிபர்களிடம் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ