மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் நால்வருக்கு சிறை
30-Nov-2024
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு ஆயுள்
13-Nov-2024
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விருப்பாச்சி சாமியார்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் 26,நவீன் 29. இவர்கள் 2020ல் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் சில சிறார்களுடன் கிரிக்கெட் விளையாடினர். அப்போது சங்கர், நவீன், 2 சிறார்கள் உட்பட நால்வர் சேர்ந்து தங்களுடன் விளையாடிய 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதை அலைபேசியில் வீடியோ எடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றவருடன் தெரிவிக்க சத்திரப்பட்டி போலீசார் போக்சோவில் நால்வரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 2 சிறார்களில் ஒருவர் இறந்தார். மற்றொருவருக்கு பெயில் வழங்கப்பட்டது. குற்றவாளிகள் சங்கர், நவீன் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.
30-Nov-2024
13-Nov-2024