| ADDED : ஜன 10, 2024 06:34 AM
செம்பட்டி : போடிக்காமன்வாடியில் முன் விரோதத்தால் டூவீலர் மெக்கானிக் தெருவில் ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.செம்பட்டி அருகே போடிக்காமன்வாடியை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் செந்தில்குமார் 42. மனைவி கவிதா 38, மகன்கள் நவநீத் 12, சந்தீப் 10, ஆகியோருடன் வசித்து வந்தார். இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 11 :00 மணிக்கு இதே ஊரைச் சேர்ந்த சிலர் வீட்டிற்குள் நுழைந்து தாக்கினர். தப்பிய அவரை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.போலீசார் விசாரணையில், பட்டிவீரன்பட்டி பள்ளியில் படித்து வரும் செந்தில்குமாரின் மகன் நவனீத்திற்கும், அதே பள்ளியில் படிக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டி மகன் ஸ்ரீராம் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னையில் ஏற்கனவே உள்ள முன் விரோதத்துடன் பாண்டி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஈடுபட்டது தெரிந்தது. சரவணன் 40, சரவணக்குமார் 27, சரவணகுமார் 31, பாண்டி 32, அமராவதி 35, முத்துலட்சுமி 58, அனுமக்காள் 60, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 11 பேரை தேடுகின்றனர்.கொலையை தொடர்ந்து போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.