உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை

கொடையில் அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை

கொடைக்கானல்:கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அடையாளம் தெரியாத தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி கம்பி பாலம் அருகே நேற்று காலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டோரம் வனப்பகுதியில் இருவர் இறந்து கிடந்தனர். அருகில் விஷ பாட்டில் இருந்தது. வனத்துறையினர் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரது உடலையும் மீட்டனர். இறந்தவர்கள் 55 வயது முதல் 60 வயது உடையவர்கள். தம்பதியாக இருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்த நிலையில் அவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ