ஒன்றிய அலுவலகம் முற்றுகை
செம்பட்டி, ஆக.20- ஆத்துார் ஒன்றியம் பாளையங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கூலம்பட்டியில் 2 மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கல் நடந்தது. சில வாரங்களாக குடிநீர் வினியோகத்தில் குளறுபடிகள் நீடிக்கிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று ஆத்துார் ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கலெக்டரின் களப்பணி ஆய்வு காரணமாக உயர் அதிகாரிகள் வெளியில் சென்றிருந்தனர். எனவே குடிநீர் பிரச்னை குறித்து அலுவலகத்தில் மனு அளித்த பின் கலைந்தனர்.