உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஐ.மு.மு.க., ரத்ததான முகாம்

ஐ.மு.மு.க., ரத்ததான முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குடியரசுதினத்தை யொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி உடன் இணைந்து ரத்த தான முகாம் நடந்தது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மருத்துவ சேவை அணி செயலாளர் சேக் பரீத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நைனா முகமது, பொருளாளர் சேட், வைகறை தொழிற் சங்க செயலாளர் உமர் சரிப் முன்னிலை வகித்தனர். மருத்துவ சேவை அணி நகர நிர்வாகி அனஸ் வரவேற்றார். ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் ஜமால் முகமது, அரசு ரத்த வங்கி பொறுப்பு மருத்துவர் லில்லி மலர் துவக்கி வைத்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐ.மு.மு.க., மருத்துவ சேவை அணி குழுவினர் அன்வர், தஸ்தகீர், அனீஸ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி