உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்

-வடமதுரை: வடமதுரை முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதற்காக நேற்றுமுன்தினம் காலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடங்கள் புறப்பாடாக கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை முரளி சிவாச்சாரியார், நாராயணன் பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். வேடசந்துார் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன், துணைத் தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் பத்மலதா, தி.மு.க., நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், கோயில் தக்கார் முத்துலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை