உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்

பழநியில் வைகாசி விசாக திருவிழா திருக்கல்யாணம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் வைகாசி விசாக திருவிழாவையடுத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பழநி கிழக்கு ரதவீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடி கட்டி மண்டபத்தில் வசந்த உற்ஸவமான வைகாசி விசாக விழா ஜூன் 3 துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நேற்று (ஜூன் 8) மாலை கோயில் முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி எழுந்தருள சிறப்பு ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பின் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இன்று மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.விடுமுறை நாளான நேற்று பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ரோப்கார், வின்ச், பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். முகூர்த்த நாள் என்பதால் திருஆவினன்குடியில் 75 திருமணங்களுக்கு மேல் நடந்தது. புது தாராபுரம் ரோடு முதல் குளத்து ரோடு வரை நேற்று காலை ஏற்பட்ட நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாயினர்.குளத்து ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தியதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !