உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

சாணார்பட்டி : பட்டா பெயர் மாறுதலுக்காக விவசாயியிடம் ரூ. 2500 லஞ்சம் வாங்கிய திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்துார் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியா 45 ,கைது செய்யப்பட்டார்.சாணார்பட்டி அருகே பண்ணைபட்டியை சேர்ந்த விவசாயி மகேஸ்வரன் 29. இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாறுதல் செய்ய சிலுவத்துார் வி.ஏ.ஓ., முகமது ஜக்காரியாவை தொடர்பு கொண்டார். அதற்கு அவர் ரூ.2500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து மகேஸ்வரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., நாகராஜ் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய 2500 ரூபாய் நோட்டுகளை மகேஸ்வரன், நேற்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வைத்து முகமது ஜக்காரியாவிடம் கொடுத்துள்ளார். அப்பணத்தை வாங்கிய வி.ஏ.ஓ.,வை அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை