மேலும் செய்திகள்
பழநியில் வேகமாக நிரம்பும் அணைகள்
04-Nov-2024
பழநி,: பழநி- கொடைக்கானல் ரோட்டில் உள்ள வரதமாநதி அணை பூங்கா சேதமடைந்துள்ளது. இதை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழநியிலிருந்து கொடைக்கானல் செல்லும் ரோட்டில் 9 கிலோமீட்டர் தொலைவில் வரதமாநதி அணை உள்ளது. அணைப்பகுதியில் முன்புறம் பூங்கா உள்ளது. பல ஆண்டுகளாக இங்கு சறுக்கு, நீரூற்றுக்கள், பொம்மைகள் சேதம் அடைந்து உள்ளன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கொடைக்கானல், பழநிக்கு வருகின்றனர். பழநி வந்து கொடைக்கானல் செல்லும் பயணிகள் வரதமாநதி அணை பகுதிக்கு சென்று அங்குள்ள பூங்கா சேதம் அடைந்துள்ளதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தற்போது அணை நிரம்பி அழகான ரம்யமான காட்சி அளிக்கிறது. இதைப்பார்க்க அதிக பயணிகள் வருகின்றனர். ஆனால் அவர்கள் பொழுதுபோக்கிற்கு இடம் இல்லாமலிருப்பதால் உடனே திரும்பி செல்கின்றனர். பொதுப்பணித்துறை, சுற்றுலா துறையினர் அணையின் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
04-Nov-2024