உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பில் வேடசந்துார் வீரனாங்குளம்

கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பில் வேடசந்துார் வீரனாங்குளம்

வேடசந்துார்: வேடசந்துார் வீரனாங்குளத்தில் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் இதனை அகற்றி குளத்தை முறையாக துார் வார வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.வேடசந்துார் அரசு மருத்துவமனை அருகே உள்ளது வீரனாங்குளம். 15 ஏக்கரில் உள்ள இந்த குளத்தின் ஓர பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் நலன் கருதி 6,7,8 வகுப்புகளுக்கான பள்ளி கட்டடம் கட்டப்பட்டு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. மீதம் உள்ள பகுதியில் தேங்கும் தண்ணீரால் நிலத்தடி நீருக்கு வழி வகுக்கிறது.நகரை யொட்டி உள்ளதால் இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களில் கூட பாம்புகள் குடியிருப்பு பகுதிக்கு படையெடுக்கின்றன. இப்பகுதி மக்களின் நலன் கருதி குளத்துப் பகுதியில் உள்ள கருவேல முட்களை அகற்றி குளத்தை முறையாக துார்வாரி தண்ணீர் தேக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அச்சத்தில் மக்கள்

கே.ரெங்கநாயகி, விவசாயி,வேடசந்துார்: குளத்தில் கருவேலன் முட்கள்நிறைந்து கிடப்பதால் குளமே புதர்காடாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் சமீபத்தில் தீப்பிடித்த நிலையில் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். இங்குள்ளபொதுக் கழிப்பறையும் குளத்துப் பகுதியில்தான் உள்ளது. கருவேல மரங்களால் இரவு நேரங்களில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். இதை கருதி இப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை ஒட்டுமொத்தமாக அகற்ற வேண்டும்.

குளத்தை சுத்தப்படுத்த வேண்டும்

ஏ. சுமையா, வேடசந்துார்: வேடசந்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய குளமே இந்த வீரனாம் குளம் தான். மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் அருமையாக இருக்கும். தற்போது இக் குளம் முழுவதும் கருவேல மரங்கள் மூடி கிடக்கின்றன. கருவேல மரங்களை அகற்றி குளத்தை சுத்தப்படுத்த வேண்டும். குளம் முட்புதர்கள் இன்றி இருந்தாலே கரையோர மக்கள் நிம்மதியாக இருப்பார்.

கால்வாயையும் துார் வாருங்க

பி.ராக்கம்மாள், வேடசந்துார்: நகர் பகுதிதய யொட்டி உள்ள இந்த குளம் ஒரு காலத்தில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதனால் நகர் பகுதியில் உள்ள போர்வெல்களில் மக்கள் குடிநீர் பிரச்னையின்றி காலத்தை கடத்தினர். குளத்தின் ஓரப்பகுதியில் அரசு மருத்துவமனை, அரசு பள்ளி கட்டப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எஞ்சிய பகுதியில், கருவேல முட்கள் மூடி கிடக்கின்றன. இதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதோடு இங்கு வரும் வரத்து வாய்க்காலையும் துார்வாரி தண்ணீர் தேய்க்கினால் நகர் பகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை