உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 12 மீட்டருக்கு மேலான வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை

12 மீட்டருக்கு மேலான வாகனங்கள் கொடைக்கானல் செல்ல தடை

திண்டுக்கல் ; திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்வதற்கு 12 மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு நவ.,18 முதல் தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.அவரது செய்தி குறிப்பு : தமிழ்நாடு மாநில போக்குவரத்து அதிகாரி இசைவுடன் பொது நலன் கருதியும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் 12 மீட்டருக்கு கூடுதலான நீளம் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்கள், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதையின் தொடக்கப்புள்ளி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதை கடந்து செல்வதற்கு நவ.,18 முதல் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை