மேலும் செய்திகள்
துாப்புல் பரகால மடத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
13-Oct-2024
திண்டுக்கல்: விஜயதசமி யொட்டி பள்ளி,கோயில்களில் வித்யாரம்பம் நடக்க பெற்றோர் குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் அவர்களது கல்வி, ஞானம் சிறக்கும் என்பது ஐதீகம். அதன்படி நேற்று பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து வித்யாரம்பத்தை பெற்றோர்கள் தொடங்கினர். கோயில்களில் கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து குழந்தைகளை அதன் முன் அமரவைத்தனர். பின்னர் குழந்தையின் நாக்கில் தேனை தடவி நெல்மணிகளில் பிள்ளையார் சுழி போட்டு அகர வரிசை எழுத்துக்களை எழுத வைத்தனர். இது தவிர மாவட்டம் முழுவதிலும் பல்வேறு கோயில்களில் இந்நிகழ்ச்சி நடந்தது.
13-Oct-2024