என்.பி.ஆர்., ல் வித்யுத் 2கே25
நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் மேலாண்மைத் துறை சார்பாக மாநில அளவில் கல்லுாரிகள் இடையே 'வித்யுத் 2கே25' போட்டிகள் நடந்தது.முதலாம் ஆண்டு மேலாண்மைத் துறை மாணவர் முத்தரசு வரவேற்றார். என்.பி.ஆர்., பொறியியல்,தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் அமீனா பானு தலைமை வகித்தார். 27 கல்லுாரிகளைச் சார்ந்த 496 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக பல்வேறு மேலாண்மைத்துறை சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சி சாரநாதன் பொறியியல்,தொழில்நுட்பக்கல்லுாரி முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. 2ம் இடத்தை கரூர் செட்டிநாடு கல்லுாரி கைப்பற்றியது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை என்.பி.ஆர்., கல்விக்குழம இயக்குனர்கள் ஆனந்த்,அருணா செந்தில்குமார் வழங்கினர். இறுதியாக என்.பி.ஆர்., பொறியியல் , தொழில்நுட்பக் கல்லுாரி மேலாண்மைத் துறை தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.