உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விக்ரம சோழீஸ்வரர் கோயில் விமான பாலாலயம்

விக்ரம சோழீஸ்வரர் கோயில் விமான பாலாலயம்

பழநி: மானூர் விக்ரம சோழீஸ்வரர் கோயிலில் விமான பாலாலய யாகம் நடைபெற்றது. பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மானூர் விக்ரம சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறவுள்ளது. அதற்காக, நேற்று கோயில் விமான பாலாலயம் நடைபெற்றது. இதில் யாக பூஜைகள் நடைபெற்று பாலாலயம் அத்தி மரத்தில் செய்யப்பட்டது. யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலச புனித நீரில் அபிஷேகம், வாஸ்து பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை