கிராம அனுபவ திட்டப் பயிற்சி
நிலக்கோட்டை: குல்லலக்குண்டு கிராமத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவி அபியாஸ்ரீ, தனது கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், கத்தரி விவசாயத்தில் பரவலாக இழப்பீடுகளை ஏற்படுத்தும் தண்டு, காய்த் துளைப்பான் பாதிப்பை கட்டுபடுத்த சோலார் விளக்குப் பொறி குறித்த செயல்விளக்கம் அளித்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த கருவியான சோலார் விளக்கு பொறியை கத்தரி தோட்டங்களில் நிறுவும் முறை, அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். கத்தரி சாகுபடியில் சோலார் விளக்குப் பொறி ஏற்படுத்தும் நேர்மறை தாக்கங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூடுதலாக எடுத்துரைத்தார்.