மேலும் செய்திகள்
புகையிலை பாக்கெட் பறிமுதல்
18-Nov-2024
நத்தம்: -நத்தம் தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் மக்கள் அலைக்கழிக்க படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.இங்கு தினமும் நத்தம் , சுற்று கிராமபகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் முகவரி மாற்றம், ஆதார் புதுப்பிதற்காக வந்து செல்கின்றனர். இங்கு வாரந்தோறும் 7 நாட்களுக்கும் சேர்த்து 150 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கபட்டு வருகிறது.இதனால் தினமும் காலையில் வரும் பொதுமக்கள், சிறுவர்கள் அலைக்கழிக்க படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7:00 மணிக்கே ஆதார் புதுப்பிக்க 100-க்கு மேற்பட்ட மக்கள் குவிந்தனர். காலை 9: 30 மணி வரை ஆதார் மையம் திறக்கபடவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் ஆதார் மையத்தில் தொடர்ந்து அலைக்கழிக்கபடுவதை கண்டித்தும், கூடுதல் ஆதார் மையங்கள் திறக்க வலியுறுத்தியும் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி உள்ளிட்ட போலீசார் ,வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி கூடுதல் மையம், சிறப்பு முகாம்களும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் நத்தம்- திண்டுக்கல் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18-Nov-2024